தமிழகத்தில் விழுப்புரம் மக்களவை தொகுதியின் உறுப்பினர் ரவிக்குமார் ஆவர். இவர் முதன்முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 17- வது மக்களவையின் முதல் கூட்டத்தில், தனி நபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் "I BEG" என்ற வார்த்தையை சேர்த்திருந்தார். இதற்கு மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத்தலைவருமான வெங்கய்யா நாயுடு "I BEG" என்ற வார்த்தையை சேர்க்க வேண்டாம் என்று மக்களவை எம்.பி ரவிகுமாரிடம் அறிவுறித்திருந்தார். "I BEG" என்ற வார்த்தைக்கு "நான் கெஞ்சுகிறேன்" என்று அர்த்தம் ஆகும்.
சுதந்திர நாட்டில் யாரும், எதற்கும் யாசகம் கேட்க தேவையில்லை என துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தனி நபர் மசோதாவில் "I BEG" என்ற வார்த்தையை நீக்கிய தமிழக எம்.பி ரவிக்குமார் மக்களவையில் தாக்கல் செய்தார். ஆனால் ரவிக்குமாரின் மசோதாவை பதிவு செய்த மக்களவை அலுவலர்கள் "I BEG" என்ற வார்த்தையை மசோதாவில் சேர்த்து பதிவு செய்துள்ளனர்.