உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சட்டத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் புறம்பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் வருந்தத்தக்கவை. மக்கள் தேர்வு செய்யும் பதவிகள் ஏலம் விடப்படுவது. அவர்கள் உணர்வுகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயல். ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிப்பதை தடுக்க தேர்தல் அலுவலர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு. இது போன்ற செயல்கள் நிகழாவண்ணம் முன்னேற்பாடு மேற்கொள்ளவும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாம் நாளில் 1,784 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 1,456 மற்றும் கிராம ஊராட்சி தலைவர் 288 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. மேலும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 38, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 2 மனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனு தாக்கலின் போது தாக்கல் செய்த உறுதிமொழி ஆவணம் https://tnsec.tn.nic.in/என்ற இணையதளத்தில் வெளியீடு. இவ்வாறு தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று (09.12.2019) தொடங்கிய நிலையில், டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மொத்தம் 5,001 வேட்புமனுக்கள் பெறபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.