Skip to main content

உள்ளாட்சி தேர்தல்- உச்சநீதிமன்றத்தில் திமுக புதிய மனு!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது.
 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் தமிழக அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு மேயர், நகராட்சித் தலைவர், ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டத்தை கொண்டு வந்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.

tamilnadu local body election dmk party new petition file at supreme court

 

இந்நிலையில் திமுக கட்சி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புதிய மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழகத்தில் தொகுதி வரையறை பணிகளை நிறைவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தல் பட்டியலை வெளியிடவும், தேர்தலை நடத்தவும்  தடை விதிக்க வேண்டும் என்று திமுக மனுவில் கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கனவே தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வராத நிலையில் தேர்தலை நடத்தக்கூடாது என்று புதிய மனுவை திமுக  தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வழக்கு காரணமாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

சார்ந்த செய்திகள்