ஈரோடு மாவட்டத்தில் நேற்றும், இன்றும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இன்று இரண்டாம் நாள் பயணமாக மொடக்குறிச்சி சென்றார். அங்கு அப்பகுதி மக்களிடம் சிறுது நேரம் பேசிய கமல்ஹாசன் நேராக ஈரோட்டில் உள்ள பெரியார், அண்ணா நினைவிடத்திற்கு சென்றார்.
அந்த நினைவிடத்தில் பெரியார் பயன்படுத்திய பொருட்கள், அவர் வாழ்ந்த அறைகளை தனியாக சுற்றிப் பார்த்து ஒவ்வொரு இடங்களிலும் சிறுது நேரம் செலவலித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்,
தந்தை பெரியார் இல்லம் என் தந்தை வீடு. இதற்கு முன்பு சென்னையில் உள்ள பெரியார் திடலுக்கு பலமுறை போய் வந்துள்ளேன். இன்று தான் முதன் முதலாக பெரியார் பிறந்து, வாழ்ந்து அரசியல் பணியாற்றிய அவரது இல்லத்திற்கு சென்று வந்தேன்.
அது எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறிய அவர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுபவர்களை சட்டத் தளர்வு செய்து விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
காவரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இருந்து பிரச்சனையை திசைதிருப்பும் நடவடிக்கையை கைவிட்டு ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் குரலான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு தான் உள்ளது என அவர் கூறினார்.