Skip to main content

டி.என்.சேஷன் மறைவிற்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்...

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் (வயது 87) மேற்று இரவு காலமானார்.

 

tamilnadu leaders about tn sheshan

 

 

1955 ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்து பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் சேஷன்.  1990- 96 ஆண்டுகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணிபுரிந்த இவர், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். இவரது உடல் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "சிறந்த நிர்வாகி, கடின உழைப்பாளியான டி.என்.சேஷன் அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மை கொண்டவர். தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்தவர்" என தெரிவித்துள்ளார்.

சேஷன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின், "தேர்தல் நடைமுறையை முறைப்படுத்தி மறுமலர்ச்சியை உருவாக்கியவர் டி.என்.சேஷன்; அவர் காட்டிய வழியில் பயணிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி" என தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்