Skip to main content

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிகிச்சையில் இருந்த பலர் வீடு திரும்பினர்! காவல்துருப்புகள் வாபஸ் இல்லை!

Published on 09/06/2018 | Edited on 09/06/2018
po p[

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே.22ம் தேதி தன்னெழுச்சியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி மக்கள் பேரணியாக சென்றனர். அப்போது போலீசாரின்  தடியடியாலும் துப்பாக்கிச்சூட்டாலும் 13 பேர் மரணமடைந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

 

இவர்களில் சுமார் 52 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்களை அரசியல் தலைவர்கள் மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோரும் நடிகர்கள் கமல், ரஜினி, சரத்குமார், விஜய் உள்ளிடோரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி சென்றனர். 

 

ஆரம்பத்தில் பாதுகாப்புக்காக 2000 போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், கூடுதல் பாதுகாப்புக்காக மேலும் 2000 போலீசார் வரவழைக்கப்பட்டனர். தமிழ்நாட்டின் சட்டம் ஓழுங்கு ஏடிஜிபி விஜயக்குமார் மற்றும் அதிகாரிகள் தூத்துக்குடியிலே முகாமிட்டுள்ளனர். இதனிடையே 18 நாட்கள் கழித்தும் சிகிச்சையில் இருந்த 32 பேர் அரசு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 

 

தற்போது குண்டு காயம் பட்டவர்கள் ஏழு பேரும், ஆர்த்தோ வார்டில் எழும்பு மற்றும் கால் சிகிச்சைக்காக 9 பேர் என மொத்தம் 16 மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வருவதாக இருந்தது ரத்து செய்யப்பட்டது. 

 

இதையடுத்து அவர் 11 அல்லது 12 ஆம் தேதி தூத்துக்குடி வரக்கூடும் என்றும் அப்போது அவர் காயம்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார் என்கிற தகவலும் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவமனை சோர்ஸ்கள். இதன் காரணமாகவே தூத்துக்குடியில் போலீஸ் துருப்புகள் குறைக்கவும் இல்லை வாபஸ் பெறவும் இல்லை என்று காவல்துறை வட்டாரங்கஙள் தெரிவிக்கின்றன.

சார்ந்த செய்திகள்