"தமிழகத்தில் வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழக மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை நகர் மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாம்பரம் (செங்கல்பட்டு)- 31 செ.மீ., புதுச்சேரி- 30 செ.மீ., விழுப்புரம்- 28 செ.மீ., கடலூர்- 27 செ.மீ., டி.ஜி.பி.அலுவலகம் (சென்னை)- 26 செ.மீ., சோழிங்கநல்லூர்- 22 செ.மீ., தாமரைப்பாக்கம்- 19 செ.மீ., பரங்கிப்பேட்டை (கடலூர்)- 18 செ.மீ., பள்ளிப்பட்டு (திருவள்ளூர்)- 17 செ.மீ., சோழவரம்- 16 செ.மீ., பூந்தமல்லி- 15 செ.மீ., அம்பத்தூர் (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி- தலா 15 செ.மீ., திண்டிவனம் (விழுப்புரம்), மதுராந்தகம் (செங்கல்பட்டு)- தலா 14 செ.மீ., ஆலந்தூர், எம்.ஜி.ஆர்.நகர் (சென்னை), காஞ்சிபுரம், சிதம்பரம் (கடலூர்), மரக்காணம் (விழுப்புரம்), செங்கல்பட்டு- தலா 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நவம்பர் 29- ஆம் தேதி தென் கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது." இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.