Published on 19/06/2020 | Edited on 19/06/2020

தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அஞ்சாத அயல்நாடுகளும் திண்டாடி நடுங்கும் கொடூரக் கரோனா திண்டாடி ஓடும். விலகியிருந்து விழிப்புடன் இருந்து வென்றிடுவோம் பெருந்தொற்று அரக்கனை. முகக்கவசம் தரித்து கைகளைச் சுத்தப்படுத்தி அநாவசியம் தவிர்த்து வீட்டிலிருங்கள்; அடங்கும் தொற்று; ஒத்துழைப்பு மட்டும் தந்து நம்பிக்கையோடு காத்திருங்கள்; கரோனாவை வீழ்த்துவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.