தமிழ் கலை பண்பாட்டுத்துறை சார்பாக, கவர்னரை சந்தித்த இயக்குனர் பாரதிராஜா செய்தியாளர்களை சந்தித்தார். இதுபற்றிய பதிவில்,
தமிழ் கலை, பண்பாட்டுத்துறை சார்பாக ஆளுநரை சந்தித்து பேசினோம். அப்போது அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் பற்றிய கேள்விக்கு ஆளுநர் பதில் கூறுகையில், "140க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தமிழக அரசால் பெறப்பட்டது அப்படியானால் கர்நாடகத்தை சேர்ந்தவரின் விண்ணப்பத்தை ஏன் பெற்றார்கள், தமிழக அரசு மூலம் பரிசீலிக்கப்பட்ட துணைவேந்தர் நியமன பட்டியலில் அவர் எப்படி இடம் பிடித்தார் என தெரியவில்லை" என எங்கள் முன் கேள்வியை வைத்துள்ளார் எனவே இதற்கு தமிழக அரசு விளக்கம் கொடுக்க வேண்டும். கொந்தளிப்பான இந்த நேரத்தில் இந்த செய்கை எப்படி நடந்தது.
அதேபோல் இசைக்கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரிக்கு துணைவேந்தர் நியமனம் எப்படி நடந்தது எனவும் தமிழக அரசிடம் இருந்து விளக்கம் தேவை. ஆளுநர் கூறுகையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் இறுதி நிலை பட்டியலில் இருந்த மூன்று பேரில் கல்வி அடிப்படையை வைத்து சூரப்பாவை நியமித்தோம் ஆனால் அவருடைய விண்ணப்பத்தை பெற்றது தமிழக அரசுதான் என தெளிவுபடுத்தியதாக கூறினார்.