Published on 11/10/2020 | Edited on 11/10/2020
ஆலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்கும் வசதியை ஏற்படுத்த அரசு சட்டத்திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது.
அந்த அரசிதழில், 'ஆலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்க வேண்டும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைவருக்கும் முழு பாதுகாப்பு உடை வழங்க வேண்டும். பாதுகாப்பு உடையானது இந்திய தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள விதிகளின் படி தயார் செய்யப்பட்டு இருக்க வேண்டும். பாதுகாப்பு தலைக்கவசம், கையுறை, கண்ணாடி, முழு முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும் வழங்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.