Skip to main content

கோவளத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை அள்ளிய பிரதமர்!

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் பிரதமர் மோடி சீன அதிபர்  ஜின்பிங் ஆலோசனையில் ஈடுபட்டனர்.  
 

narendra modi

 

 

இரவு உணவு விருந்து முடிந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருநாட்டு தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு சீன அதிபரை பிரதமர் மோடி மாமல்லபுரத்திலிருந்து வழி அனுப்பி வைத்தார் பிறகு அவரும் கோவளம் புறப்பட்டு, தாஜ் ஃபிஷர்மேன் கோவ் ஹோட்டலில் இரவு தங்குவதற்காக சென்றார். இந்நிலையில் இன்று காலை கோவளம் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது பிளாஸ்டிக் குப்பைகள் கரைக்கு ஒதுங்குவதை பார்த்த மோடி, அரைமணிநேரம் துப்புரவுப் பணி மேற்கொண்டார். 

அள்ளிய குப்பைகளை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜ் என்ப்வரிடம் தந்து பொது இடங்களை சுத்தமாகவும் துய்மையாகவும் வைத்துக்கொள்ளும்படி அறிவுருத்தியுள்ளார். அப்போதுதான் நாம் ஆரோக்யமாக இருக்க முடியும் என்றும் அறிவுருத்தியுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்