Published on 23/07/2021 | Edited on 23/07/2021
தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், தமிழகத்தில் 67,76,945 பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கின்றன. அதில் 24 வயதில் இருந்து 35 வயது வரை உள்ளவர்களின் எண்ணிக்கை 24,88,254 ஆக உள்ளது. அதேபோல், 36 வயது முதல் 57 வயதுக்குட்பட்டவர்கள் 12,26,417 பேர்; 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10,907 பேர் வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கின்றன.
1,36,515 மாற்றுத்திறனாளிகள் அரசு வேலைக்காகப் பதிவு செய்துள்ளனர். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களில் 85,310 பேர் பட்டதாரி ஆசிரியர்கள்; 2,42,711 பேர் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆவர்.