Published on 22/06/2021 | Edited on 22/06/2021

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த மின்சார வாரியம் சலுகை அளித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று (22/06/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பி.எம்.சி. எனப்படும் முந்தைய மாத கணக்கீட்டு முறையைப் பின்பற்றி மின்கட்டணம் செலுத்த வேண்டும். ஜூன் 15- ஆம் தேதி முதல் ஜூன் 30- ஆம் தேதி வரையிலான காலத்தில் கடந்தாண்டு ஜூன் மாத மின் கட்டணத்தைச் செலுத்தலாம். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு மின் கட்டண சலுகை பொருந்தும். புதிய நுகர்வோர், கணக்கீடு இல்லாதோர், கூடுதல் கட்டணம் என கருதுவோர் 2021 ஏப்ரல் மாத கட்டணத்தை செலுத்தலாம். 2021- ஆம் ஆண்டுக்கான உத்தேச கட்டணம் ஆகஸ்ட் மாதம் முறைப்படுத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.