Skip to main content

தேர்தல் செலவைத் தாக்கல் செய்யவில்லையா?- வேட்பாளர்களை எச்சரிக்கும் தேர்தல் ஆணையம்!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

 Election Commission warns candidates against disqualification if they do not file election expenses

 

தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் கடந்த 12/10/2021 அன்று வெளியாகி, அனைத்து மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.

 

இந்தநிலையில், நடைபெற்று முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் செலவுக்கணக்கை வேட்பாளர்கள் தாக்கல் செய்யாவிட்டால் 3 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யப்பட நேரிடும் என மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. உரிய அலுவலர்களிடம் தாக்கல் செய்தமைக்கான ஒப்புதலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் செலவு விவரங்களைத் தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இல்லையெனில் மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாதபடி தகுதிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்