கட்டுமான துறையில் அறிமுகமாகிவரும் தொழில்நுட்ப முறைகளில் 'ஃபில்லர் சிலாப்' (Filler Slab) என்ற முறை இன்று பிரபலமாகிவருகிறது. அரியலூர் அருகே கொள்ளிடக்கரையோர கிராமமான கீழக்காவட்டாங்குறிச்சி கட்டடம், சுற்றுச்சூழல் ஆர்வலர் நம்மாழ்வாரின் வழித்தோன்றலான தங்க. சண்முக சுந்தரம் இதுகுறித்து விளக்கமளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “ஃபில்லர் சிலாப் என்பது வழக்கமாக அமைக்கும் ஆர்.சி.சி., ரூஃப்தான். சிலாபின் அடிப்பகுதியான 'டென்ஷன் ஜோனில்' கான்கிரீட்டுக்குப் பதில் எடை குறைவான நாட்டு ஓடு, மங்களூரு டைல்ஸ் (துளையுடன் அல்லது துளை இல்லாமல்), களிமண் பானை, தேங்காய் ஓடுகள் போன்ற இயற்கை பொருட்களை அடுக்கிவைத்து இடைவெளியில் கம்பி கட்டி, சிலாப் மேல் கான்கிரீட் அமைப்பர். இதனால் 30 சதவீத கான்கிரீட் அளவு குறைவு, அதே நேரம் வழக்கமான கான்கிரீட் வலிமை குறையாது. கம்பி, சிமென்ட் அளவு குறைவதால் 25 - 30 சதவீதம் பணம் சேமிக்கப்படும்.
இது தவிர கட்டடத்தின் சுய எடை குறையும். இந்த ஃபில்லர் சிலாப் அமைப்பதால் உள்ளே பொதிக்கப்பட்ட ஆற்றல் சேமிக்கப்படுகிறது. களிமண் ஓடுகள் பயன்படுத்துவதால் அவை இயற்கையான இன்சுலேஷனை வழங்கும். வீட்டின் உட்பகுதி குளிர்ச்சியாகும். மின்செலவு குறையும். கார்பன் வெளிப்பாடு 30 சதவீதம் குறைவால் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கும். தரம், பாதுகாப்பு, கட்டமைப்பு, நிலையான அபிவிருத்தி என பல்வேறு அம்சங்களைக் கொண்டதுதான் இந்த ஃபில்லர் சிலாப் முறை.
இதுகுறித்து அறிவதற்கு - (8220365496) தங்க சண்முக சுந்தரம்.