இந்தியாவில் மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் டெல்டா பிளஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்பட்டிருந்தது. இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்டா பிளஸ் கரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து பேசுகையில், "தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. டெல்டா பிளஸ் கரோனா உறுதியான நபர் சென்னையைச் சேர்ந்தவரா என ஆய்வு செய்து வருகிறோம். ஆயிரத்துக்கு மேற்பட்ட மாதிரிகளைப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.