Published on 23/06/2021 | Edited on 23/06/2021
தமிழகத்தில் இன்று 6,596 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 1,70,105 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒரு நாள் பாதிப்பு 6,596 ஆக உள்ளது.
கரோனாவால் மேலும் 166 பேர் இன்று உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,746 ஆக உயர்ந்துள்ளது. இதில் அரசு மருத்துவமனைகளில் 109 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 57 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 52,884 ஆக உள்ளது. கரோனாவில் இருந்து இன்று மேலும் 10,432 பேர் குணமடைந்ததால், இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 23,58,785 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 33 வது நாளாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.