Published on 06/11/2019 | Edited on 06/11/2019
சிறப்பு குறைதீர்வு திட்டத்தில் நிலுவையிலுள்ள 23,538 மனுக்கள் மீது நவம்பர் 15- க்குள் தீர்வு காண முதல்வர் ஆணை. சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 9,72,216 மனுக்கள் பெறப்பட்டதாவும், அதில் 5,11,186 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டதாகவும் தகவல் கூறுகின்றன. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் ஏற்றுக் கொள்ளப்படாத மனுக்களை ஆட்சியர்கள் ஆய்வு செய்யவும் உத்தரவு. தீர்வு காண ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு அமைச்சர் தலைமையில் உதவிகள் வழங்கவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.