திருச்சி கொள்ளிடம் ஆற்றை நாசமாக்கி மழை வேண்டி யாகம் நடத்தும் அறிவிழந்த தமிழகஅரசுக்கு புத்தி தெளிய வேண்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கொள்ளிடம் ஆற்றில் யாகம் வளர்க்கும் போராட்டம் நடைபெறும் என்று போஸ்டர் அடித்து திருச்சி மாநகர் ஒட்டியதும் யாகம் நடத்த அனுமதி கேட்டு கொடுத்த கடிதத்தை உடனடியாக அனுமதிமறுத்த அனுப்பியது காவல்துறை.
இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து ஜனநாயவாலிபர் சங்கத்தின் ஶ்ரீரங்கம் பகுதி செயலாளர் லெனின் நம்மிடம் பேசும் போது… ஶ்ரீரங்கம் பகுதியில் உள்ள கழிவுகள் அனைதத்தையும் கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. இதனால் மாசு அடைந்து உள்ளது. ஆறுகளை பாதுகாப்பதற்கு தமிழக அரசு கோடி கோடியாக பணம் செலவு செய்கிறது. ஆனால் அத்தனையும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கொள்ளையடித்துக் கொள்கிறார்கள். ஶ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மாசுபடுவதை அமைச்சர் வளர்மதி கண்டு கொள்ளவில்லை.
ஆனால் மழை வேண்டி தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் யாகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு புத்தி தெளிய வேண்டும் என்று தான் இந்த யாகம் நடத்த முயற்சி செய்தோம்.
இன்றைக்கு காலையில் ஶ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் அழகிரிபுரத்தில் இறங்கி தமிழக அரசுக்கு புத்தி தெளிய யாகம் நடத்தினோம். அப்போது ஶ்ரீரங்கம் ஏசி இராமசந்திரன் தலைமையில் உள்ளே நுழைந்தனர். எஸ்.ஐ.கோபி தலைமையில் கைது செய்ய வந்த போது அங்கிருக்கும் நூற்றுக்கு மேற்பட்ட பொது மக்கள் போலீசார் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். இங்க இந்த கொள்ளிட ஆறு நாசமாக போயிடுச்சு என்று 6 மாசத்திற்க முன்பு இது குறித்து புகார் கொடுத்தும் இந்த பக்கமே அமைச்சர் வரவே இல்லை என்று மக்கள் கொதிப்படைந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்த இரண்டு மாதத்தில் கொள்ளிடத்தில் கலக்கும் கழிவு நீரை பைபாஸ் தாண்டி கொண்டு போய் விடுவதாக வாக்குறுதி கொடுத்தனர்.