தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இரண்டாவது முறையாக அமைச்சரவைக் கூட்டம் கூடியது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (24/06/2021) மாலை 06.00 மணிக்கு நடைபெற்றது. அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, சேகர் பாபு, பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி துறை ரீதியான புதிய திட்டங்கள், கரோனா மூன்றாவது அலை தடுப்பு மற்றும் பாதிப்பு ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், காவிரி டெல்டா பகுதிகளில் புதிய எண்ணெய் கிணறு அமைக்க ஓ.என்.ஜி.சி. முயற்சிக்கும் விவகாரம், நீட் உள்ளிட்டவைக் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் கூறுகின்றன.
தமிழக அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.