Skip to main content

10% இட ஒதுக்கீட்டிற்கு 16 கட்சிகள் எதிர்ப்பு...5 கட்சிகள் ஆதரவு!

Published on 08/07/2019 | Edited on 08/07/2019

உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, அனைத்துக்கட்சி கூட்டம் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஏழை உயர்வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரானது என கூறி கமல் 10% இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதாக தெரிவித்தார்.

 

TAMILNADU ALL PARTIES MEETING OVER 10% QUOTA 16 PARTIES AGAINST, 5PARTIES ONLY SUPPORT

 

 

அதே போல் திராவிட கழக தலைவர் வீரமணி பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை உயர்வகுப்பினருக்கு மத்திய அரசு வேறு விதத்தில் உதவலாம், 10% இட ஒதுக்கீட்டில் அரசு நல்ல முடிவு எடுத்தால், அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என கருத்து தெரிவித்தார். 10% இட ஒதுக்கீட்டில் இருந்து தமிழக அரசு விலக்கு பெற வேண்டும் என மதிமுக கோரிக்கை. சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ் மற்றும் தமீமுன் அன்சாரி 10% இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு . துணை முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி  கூட்டம் நிறைவு பெற்றது.

 

 

 

TAMILNADU ALL PARTIES MEETING OVER 10% QUOTA 16 PARTIES AGAINST, 5PARTIES ONLY SUPPORT

 

 

 

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் 10% இட ஒதுக்கீட்டிற்கு திமுக, மதிமுக, மக்கள் நீதி மய்யம், திராவிட கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட 16 கட்சிகள் எதிர்ப்பும், புதிய தமிழகம், காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் , தமிழ் மாநில காங்கிரஸ்  உள்ளிட்ட 5 கட்சிகள் மட்டுமே 10% இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கூட்டத்தின் முடிவில் பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்