தமிழ்நாடு கறிக்கோழி விற்பனையாளர்கள் மற்றும் மலைக்கோட்டை பிராய்லர் சங்கத்தினரின் அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
பாரதி சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த கறிக்கோழி வியாபாரிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டெல்டா மாவட்ட தலைவர் துரைராஜன், “தமிழகத்தில் மற்ற மாநிலங்களைவிட தரமாகவும், சுகாதாரமான கறிக்கோழி கொடுப்பதற்கும் தொழிலாளர் நலனை மேம்படுத்த குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம்.
இது தொடர்பாக கம்பெனிகளிடம் பேசும் போது கம்பெனியினர் ஒத்துழைப்பு கொடுப்பதாவும் கூறி உள்ளனர். நாங்களும் அவர்களது உற்பத்தி தொடர்பான பிரச்சனைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக ஒரு மனதாக மூடிவெடுத்துள்ளோம்.
அவர்கள், நாங்கள் கூறிய வேண்டுகோளை ஏற்று உள்ளனர். மேலும் வரும் நாட்களில் நாங்களும் பண்ணையாளர்களும், கறிக்கோழி சப்ளை செய்யும் நிறுவனத்துடனும் ஒத்துழைப்புடன் தொழிலை தொடர்வதற்கான முடிவு செய்துள்ளோம்.” என கூறினார்.