Published on 16/02/2021 | Edited on 16/02/2021
கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் சட்டத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் துவங்கப்படும் பல்கலைக்கழகத்திற்கான சட்ட மசோதா உட்பட 8 முக்கிய மசோதாக்கள் வாய்மொழி வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. பின்னர் சட்டப்பேரவைக் கூட்டமானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
அதனையடுத்து கடந்த 13-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், வரும் பிப்.23 ஆம் தேதி தமிழக நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ் இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.