காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் கடை எண்:4109 பணிபுரிந்து வந்த விற்பனையாளர்கள் துளசிதாஸ் மற்றும் ராமு ஆகிய இருவர் மீதும் சமூக விரோதிகளால் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் துளசிதாஸ் படுகொலை செய்யப்பட்டார். அதனை கண்டித்து தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் எழும்பூர் லாங்ஸ் கார்டன் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், படுகொலை செய்யப்பட்ட துளசிதாஸ் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூபாய் ஒரு கோடி வழங்க வேண்டும், படுகாயமடைந்த ராமு அவர்களுக்கு சிகிச்சைக்காக 20 லட்சம் வழங்க வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களை சமூக விரோதிகளிடம் இருந்து காப்பாற்ற சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை வடசென்னை மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் தலைமை தாங்கினார். படுகாயமடைந்த ராமு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.