தமிழக காங்கிரஸ் மீனவர் அணி தலைவர் நியமனம்
தமிழக காங்கிரஸ் கட்சியில் திருநாவுக்கரசர் தலைவராக பொறுப்பேற்ற பின்பு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் மீனவர் அணி தலைவராக கஜநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல்காந்தி ஒப்புதலுடன், அகில இந்திய காங்கிரஸ் மீனவர் அணி தலைவர் டி.என். பிரதாபன் நேற்று வெளியிட்டார். இதை தொடர்ந்து, மீனவர் அணி தலைவராக நியமிக்கப்பட்ட கஜநாதன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.