Published on 30/10/2020 | Edited on 30/10/2020
கடந்த செப்டம்பர் மாதம் 7.5% இடஒதுக்கீட்டிற்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதம் ஏற்பட்டதால், நேற்று தமிழக அரசு அதிரடியாக இடஒதுக்கீடு தொடர்பான அரசாணையை வெளியிட்டது. இந்த நிலையில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில் ஆளுநருக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரை சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பில் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.