Skip to main content

'ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பாக பரிந்துரைக்க குழு'- தமிழக முதல்வர் அறிவிப்பு!

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

Tamil Nadu Chief Minister announces 'recommendation committee for early release of life-sentenced prisoners'

 

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பாக பரிந்துரைக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவைத் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.

 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு இதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் தண்டனை முடிந்தும் விடுதலை ஆகாமல் இருக்கக்கூடிய ஆயுள் தண்டனை சிறைவாசிகள் மற்றும் வயது முதிர்ந்த சிறைவாசிகள், பல்வேறு இணைய நோய்கள் உள்ள உடல்நலம் குன்றிய சிறைவாசிகள், சீராக உடல் நலம் குன்றிய நோயுற்ற சிறைவாசிகள், மாற்றுத்திறனாளி சிறைவாசிகள் ஆகியோரின் நிலைமையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில்கொண்டு, இது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின் அடிப்படையில் அவர்களின் முன் விடுதலைக்கு உரியப் பரிந்துரை வழங்குவது தொடர்பாகச் ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற  நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.

 

இதில் மனநல மருத்துவர். மருத்துவ கல்வி இயக்குநர். சிறைத்துறை தலைமை நன்னடத்தை அலுவலர். உளவியலாளர். குற்றவியல் நடைமுறை சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற மூத்த வழக்கறிஞர் என ஐந்து உறுப்பினர்களும், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் துணைத்தலைவர் பதவியில் உள்ள அலுவலர் ஒருவரும் அங்கம் வகிப்பர் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்