பெட்ரோ கெமிக்கல் மண்டலத்திற்கு எதிராக சீர்காழி தாலுக்காவில் உள்ள கிராமங்கள்: கிராம சாபாவில் தீர்மானம்
பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சீர்காழி தாலுக்காவில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் சுதந்திர தினத்தை எதிர்த்தும் கருப்புக்கொடிகளை வீடுகளில் கட்டியும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.
நாகை - கடலூர் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்திருக்கின்றனர். 19-7-2017 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசானையை வெளியிட்டார், இதனை கண்டித்து சீர்காழி தாலுக்கா அலுவலகம் முன்பு கடந்த மாதம் 1ம் தேதி டெல்டா நீர் ஆதார பாதுகாப்பு மைய அறக்கட்டளையின் சார்பில் அதன் தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்பாட்டத்தில் 1000த்திற்கும் அதிகமான விவசாயிகளும் விவசாய சங்க தலைவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்.
பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி தலைமையில் அவர் கட்சியினர் கருத்துக் கேட்பு நடத்தினர். அதோடு வி.சி.க தலைவர் திருமாவளவன் தலைமையில் வி.சி.கவினர் கருத்துக் கேட்பு நடத்தினர். இந்த நிலையில் நேற்று 71வது சுதந்திர தின விழாவை நாடே கொண்டாடி வரும் நிலையில். சீர்காழி தாலுக்காவில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
சீர்காழி தாலுக்கா மணி கிராமத்தில் 300க்கும் அதிமான வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர், அதே போல் மங்கை மடம் கிராம மக்கள் ஊராட்சி கிராம சபா கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தனர் அதே போல் வேட்டங்குடியில் ஊராட்சியில் பொதுமக்கள் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றனர். அதிகாரிகள் மறுத்ததால் கிராம மக்கள் கூட்டத்தை புறக்கணத்தனர். அதோடு அதிகாரிகளையும் விரட்டியடித்தனர். இது போல் பல கிராமங்களிலும் மக்கள் விழிப்புடன் பெட்ரோ கெமிக்கல் திட்டத்துக்கு எதிராக சுதந்திர தினத்தை கழித்தனர் .
க.செல்வகுமார்