Skip to main content

திருமுருகன் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சமூக ஆர்வலர் புகார்!

Published on 12/08/2018 | Edited on 12/08/2018
 


சமூகவலைதளங்களில் உண்மைக்கு புறம்பான வகையில் குறிப்பிட்ட சமூகத்தினர் மீது அவதூறு பரப்பி வரும் திருமுருகன் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர். சமூக சேவகரான இவர் நேற்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சமூக வலைதளங்களில் தொடர்ந்து நாடு, சமுதாயம், மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்து மதம் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். இவரது இந்த செயல்பாடுகள் சாதி, மத ரீதியான பிரச்னைகளை தூண்டி விடுவதாக உள்ளது.

மேலும், ஒரு குறிப்பிட்ட அமைப்பை பயன்படுத்தி குறிப்பிட்ட சமூகத்தினர் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். உண்மையில் உள்ள விஷயத்தை மாற்றி பொய்யாக, ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து அவதூறு பேசுவது அந்த சமூகத்தில் உள்ள அனைவரது மனதையும் வேதனைப்படுத்தும் செயலாக உள்ளது. எனவே அவர் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்