Published on 24/06/2021 | Edited on 24/06/2021

திருச்சி, திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் கோவில் பகுதியில் உள்ள நாச்சியார் தோட்டம் என்ற இடத்தில் 20 அடி அகலமும் 20 அடி நீளமும் கொண்ட பத்தடி ஆழம் உள்ள தொட்டி ஒன்று புதிதாக கட்டப்பட்டுள்ளது.
திருவானைக்கோவில் பூஜைகளில் சிறப்பு செய்யும் அகிலா என்ற பெண் யானைக்காக (19) இந்த தொட்டி தற்போது கட்டப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நீர் தொட்டியில் யானை முழுமையாக இறங்கி படுத்துக் கொண்டும் அமர்ந்து கொண்டும் விளையாடுவதற்கும் ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்த இந்த நீச்சல் தொட்டியில் அகிலா யானை ஆனந்த குளியலிட்டு விளையாடியது.