Published on 22/08/2022 | Edited on 22/08/2022
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் என 1,000- க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், நகைகளை கணக்கெடுப்பதற்காக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். நடராஜர் கோயிலின் தங்கம், வைர நகைகள் துணை ஆணையர் ஜோதி தலைமையில் கணக்கிடப்பட உள்ளன. கோயில் பாதுகாப்பு குழுவில் உள்ள 20 பேரிடம் இருக்கும் 20 சாவிகளைக் கொண்டு நகை அறையைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்று துணை ஆணையர்களுடன் நகை மதிப்பீட்டாளர் குழுவும் நகைகளைக் கணக்கிடும் பணியில் ஈடுபட உள்ளது.
கடந்த 2005- ஆம் ஆண்டு நடந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நகை கணக்கெடுப்பு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.