Skip to main content

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு... மரண தண்டனையை உறுதிசெய்தது உச்சநீதிமன்றம்!

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

கோவையில் கடந்த 2010 ஆம் ஆண்டு இரண்டு சிறுவர்கள் கடத்தப்பட்டு அதில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.  

 

Supreme Court upholds death sentence for kovai girl child sexual abuse case


2010 ல் அக்கா முஸ்கான், அவரது தம்பி ரித்திக் கடத்தி கொலைசெய்யப்பட்டனர். இதில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாலியல் குற்றவாளி மனோகரனின் மரண தண்டனை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் தொடர்புடைய மோகன்ராஜ் ஏற்கனவே என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், மனோகரனின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரே வரியில், ''வி ஆர் கன்பார்மிங் தி டெத் பெனால்டி டு தி அக்யூஸ்ட்'' என்ற ஒரே வரியில் இந்த உத்தரவை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம். 

 

 

 

சார்ந்த செய்திகள்