மீனவர்கள் சுருக்குமடி வலைகளை கடலில் பயன்படுத்தும்போது அரிய வகை மீன்கள், பவளப் பாறைகள் ஒட்டுமொத்தமாக அரித்துச் செல்லப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு சுருக்குமடி வலையைப் பயன்படுத்த தடை விதித்தது.
இதையடுத்து இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அதிலும் 12 கடல் மைல்களுக்கு அப்பால் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.