குடிபோதையில் பணிக்கு வந்த கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்
சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு அமைச்சு பணியாளர்கள் சில குடிபோதையில் பணிக்கு வருவதாக புகார் எழுந்தது. அதன்படி போலீஸ் இணை கமிஷனர் சுதாகர் இரண்டு நாட்களுக்கு முன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து உடனே இணை கமிஷனர் சுதாகர் வில்சனை பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அங்கு ஆய்வு செய்த மருத்துவர்கள் வில்சன் மது அருந்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைதொடர்ந்து அமைச்சுப்பணியாளர் அலுவலக கண்காணிப்பாளர் வில்சனை இணை கமிஷனர் சுதாகர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.