Skip to main content

''அம்மா இருக்கேன் பயப்படாதே''-தாயின் ஆறுதல் வார்த்தைக்கு ''உம்'' என பதிலளித்த சுஜித் 

Published on 26/10/2019 | Edited on 26/10/2019

திருச்சி  மனப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியில் இரண்டு வயது குழந்தையான சுஜித் வீட்டின் அருகே 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ள நிலையில் தற்போது ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்டிருக்கும் குழந்தையை மீட்கும் பணியில் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவிவருகியது.

 

 Sujith replied "Um" to his mother's comforting words

 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 26 அடியில் உட்கார்ந்த நிலையில் இருக்க முதலில் மூச்சுத்திணறல் ஏற்படாமல் சுவாசிக்க போதுமான ஆக்ஸிஜன் கொடுக்கபட்டுவருகிறது. தற்பொழுது சுஜித் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் கிணற்றுக்குள் உள்ள குழந்தைக்கு ஒருபுறம் மன தைரியத்தை கொடுக்க அவரது உறவினர்களும் தாய், தந்தை ஆகியோரும் மருத்துவக் குழுவினரின் பரிந்துரையின் பேரில் முயற்சி எடுத்து வருகின்றனர்.

 

thiruchy

 

கிணற்றில் உள்ள குழந்தை சுஜித்திடம் தாயான கலாமெரி ''அம்மா நான் இருக்கிறேன் பயப்படாதே'' என்று கூற அந்த குழந்தை ''உம்''  என பதிலளித்துள்ளது. அதேபோல் தொடர்ந்து அந்த குழந்தையின் மாமாவும் உறவினர்களும் மேலே இருந்தவாறு அந்த குழந்தைக்கும் மன தைரியத்தைக் கொடுத்து வருகின்றனர். மேலும் சுஜித்தை மீட்பதற்காக கோவையில் இருந்து மற்றொரு குழுவும் ஸ்ரீதர் என்பவரின் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது.

குழந்தையின் ஒரு கையில் சுருக்கு கயிறு மாட்டப்பட்டுள்ள நிலையில் மற்றொரு கைக்கு சுருக்குக் கயிறு மாட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. மூன்று முறை முயன்றும் மற்றொரு கைக்கு சுருக்கு போட முடியவில்லை. குழந்தையின் இரண்டு விரல்கள் மடக்கப்பட்ட நிலையில் இருப்பதால் அந்த ஒரு கைக்கு மட்டும் சுருக்கு போட முடியவில்லை. 7 மணி நேரத்தை தாண்டியும் குழந்தை மன தைரியத்துடன் பெற்றவர்களுக்கு பதிலை சைகைகள்  மூலம் கொடுத்து மன உறுதியுடன் இருப்பது இந்த சம்பவத்தில் குறிப்பாக பார்க்கப்படுகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்