தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் ஆர். இராஜாசிதம்பரம் தலைமையில் 15/12/2019 அன்று பெரம்பலூர் ஆலை வளாகத்தில் கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பெரம்பலூர் சர்க்கரை ஆலை ஏற்கனவே நலிவடைந்த ஆலையாக மத்திய அரசால் அறிவித்த நிலையில், பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் தேங்கியுள்ள சர்க்கரை மூட்டைகள் 81802.5 குவிண்டால் சந்தைப் படுத்துவதற்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுபாட்டை உடனே நீக்கி, அனைத்து சர்க்கரை மூட்டைகளையும் லாபகராமன விலையில் விற்பதற்கு மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் உள்ளட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி மாதம் 7ஆம் தேதி செவ்வாய் கிழமை, பெரம்பலூர் பாஸ்போட் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் செந்துறை ஒன்றிய திமுக செயலாளர் மு. ஞானமூர்த்தி, பாட்டாளி விவசாயிகள் சங்க செயலாளர் சீனிவாசன், பங்குத்தாரர்கள் சங்க தலைவர் இராமலிங்கம், செயலாளர் எ.நடராஜன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் டி.எஸ்.சக்திவேல், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி. மாணிக்கம், ஆர்.சுந்தர்ராஜ் , எஸ்.கே.செல்லக்கருப்பு, எஸ். செல்லப்பிள்ளை , பு.ராமசாமி, எ.பாலகிருஷ்ணன். கரும்பாயிரம் , முரளி ஆகியோர் கலந்துகொண்டனர்.