தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களை தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்து வருகிறது. கிராம நிர்வாக அதிகாரி முதல் துணை ஆட்சியர் வரை இந்த தேர்வின் மூலம் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வில் ஆரம்பித்து நேர்காணல் வரை பல முறைகளில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக சில ஆண்டுகளாகத் தேர்வுகளை தேர்வாணையம் நடத்தாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தேர்வுகள் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
குரூப்2, குரூப் 4 தேர்வுகளுக்கான (குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று( 28/4/2022) கடைசி நாள்) அறிவிப்புகள் வெளியாகி விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ள நிலையில், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மாற்றியுள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு ஜூன் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூலை 2 ஆம் தேதி அத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை இரண்டாம் தேதி காலை, மாலை என இரு வேளைகளிலும் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.