
புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 7 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இதன் பாதிப்பு தீவிரமாகவே இருந்துவந்தது. இதனால் சென்னை புறநகர் ரயில்கள் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது கரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழ்நிலையில், நாளை முதல் குறிப்பிட்ட நேரத்தில், அதாவது பீக் ஹவர் என்று கூறப்படுகின்ற காலை 7 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 7 மணி வரையிலும் பொதுமக்கள் ரயிலில் பணிக்க முடியாது என்றும், மீதி நேரங்களில் மக்கள் ரயில்களைப் பயன்படுத்தாலம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.