Published on 24/11/2020 | Edited on 24/11/2020
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெற்றுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நவம்பர் 25- ஆம் தேதி, அதி தீவிரப் புயலாக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எங்கே கரையைக் கடக்கும் என்று உறுதியாகத் தெரியாத நிலையில், கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மதியம் முதலே காற்றுடன் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பேருந்து போக்குவரத்துக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை காலை 10 மணி முதல் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.