Skip to main content

''படிப்புக்கேத்த வேல கெடைக்கல...'' முதுகலை பட்டதாரி பேருந்து நிலைய கழிவறையில் தற்கொலை!

Published on 19/07/2022 | Edited on 19/07/2022

 

"Study work is not done..." Master's degree graduate incident the bus station toilet!

 

திருவாரூரில் முதுகலை பட்டதாரி இளைஞர் ஒருவர் படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் பேருந்து நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவாரூர் உத்தரங்குடியை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என மன உளைச்சலில் இருந்துள்ளார் சுரேஷ் குமார். இந்நிலையில் குடவாசல் அருகே பேருந்து நிலையத்திற்கு வந்த சுரேஷ் குமார் அங்கிருந்த கழிவறைக்கு சென்று பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் முதுகலை பட்டதாரி சுரேஷ்குமாரின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக உடலை அனுப்பிவைத்துள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்