கோவை மாவட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, "சிறப்பு வகுப்புகள் முடிந்த பின் மாலை 05.30 மணிக்குள் மாணவர்களை வீட்டுக்குப் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும்.
மாணவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவதைப் பள்ளி முதல்வர், நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி பேருந்துகளில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும்; அவை இயங்குவதை முதல்வர் கண்காணிக்க வேண்டும்.
மாணவிகளுக்கு Offline வகுப்பின்போது ஆசிரியைகள் உடனிருப்பதை நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் ஆசிரியர், மாணவிகள் பிரதிநிதி உள்ளிட்டோர் கொண்ட உள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும்.
பள்ளி தகவல் பலகையில் எஸ்.பி. கல்வி அலுவலர்களின் தொலைபேசி எண்கள், அலுவலக முகவரி ஒட்டப்பட வேண்டும்.
குழந்தைகள் உதவி மைய எண் 1098, பெண்கள் உதவி தொடர்பு எண்- 181 ஆகியவையும் ஒட்டப்பட வேண்டும்.
கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களின் இணையவழி வகுப்புகளை நிறுத்தக் கூடாது.
கல்விக் கட்டணம் செலுத்தாதற்காக உடல் ரீதியான, மன ரீதியான தண்டனை கண்டிப்பாக வழங்கக்கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.