சிதம்பரம் அம்பேத்கர் நகரில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கூலி தொழிலாளர்கள். இவர்களின் வீடுகள் நீர்வழி ஆக்கிரமிப்பு என வியாழக்கிழமையென்று அதிகாரிகள் இடிக்க வந்தனர். இதற்கு இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிதம்பரம் நகர் மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன் தலைமையில் மாற்று இடம் வழங்கிய பிறகு இடிக்க வேண்டும் என்றும் வீடுகளைக் காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று ஜேசிபி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கிடையே காவல்துறையின் பாதுகாப்புடன் அந்தப் பகுதிக்குச் செல்லும் மின்சப்ளை நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. கழிவறைவும் இடிக்கப்பட்டது. இதற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் உள்ளிட்ட காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வாரக் காலத்தில் வீடுகளைக் காலி செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. கூடுவெளிச்சாவடி கிராமத்தில் வீடுகள் இடிக்கபட்டவர்களுக்கு இடம் வழங்கப்டும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.