திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மூலமாக அங்குள்ள பலருக்கும் பரவியிருக்கிறதா என்பதை உறுதி செய்யும் வகையிலும், ஊரடங்கு போடப் பட்டிருப்பதாலும் மேலாப்பாளையத்திற்குச் செல்லும் அத்தனை வழிகளும் மூடப்பட்டன.
இந்தநிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் மேலப்பாளையத்தில் அனைத்துக் கட்சிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில் பொதுமக்கள் சார்பில் 10 கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
கலெக்டர் ஆலோசனை
அத்யாவசியப் பொருட்கள் தடையின்றி கிடப்பதற்கு அனைத்து கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 6 முதல் 10 மணி வரை மளிகை கடை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டது.இதனை இன்று அனைத்து கட்சியின் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.இந்த ஆய்வில் திமுக மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப், தமுமுக மாவட்ட தலைவர் ரசூல், முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் L.K.S மீரான் முஹைதீன், T.S.M.O உஸ்மான், திமுக மாணவர் அணிச் செயலாளர் ரம்ஸான் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.