Skip to main content

ஸ்தம்பிக்கும் வி.சாலை; சற்று நேரத்தில் தொடங்கும் மாநாடு

Published on 27/10/2024 | Edited on 27/10/2024
Stop V. Road; The conference will start shortly

நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று (27/10/2024) நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று முடிந்தன.

அதிகாலையில் இருந்தே பெரும்பாலான தொண்டர்கள் மாநாடு நடக்கும் இடத்திற்குப் படையெடுத்து வருகின்றனர். காலை 10 மணிக்கு மேல்தான் உள்ளே தொண்டர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்பாகவே தொண்டர்கள் உள்ளே புகுந்து நாற்காலிகளில் இடம் பிடிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.

இன்னும் சற்று நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடங்க இருக்கிறது. தற்பொழுது வரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியுள்ளதாக கூறப்படுகிறது. வி.சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழ்நிலையில் வாகனங்களில் இருந்து இறங்கி நடந்தே மாநாட்டுப் பகுதிக்கு தொண்டர்கள் நடந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தடுப்புகளை தாண்டி மாநாட்டு திடலுக்குள் தொண்டர்கள் எகிறிகுதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாஸ் உள்ளவர்கள் மட்டுமே மாநாட்டு திடலுக்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்திய நிலையில், அங்கு வெளியே காத்திருக்கும் தொண்டர்கள் தடுப்புகளை மீறி உள்ளே குதித்து சென்று வருகின்றனர். அதேநேரம் வெய்யில் காரணமாக அங்கு பலர் அவதி அடைந்துள்ளனர். வெய்யில் தாக்கம் காரணமாக இதுவரை 94 பேர் மயக்கம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்