திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், ஜி.வி.என் பள்ளி தாளாளர் சந்திரசேகர், ஏலூர்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிசந்திரன், ஐஜேகே மாவட்டதலைவர் கருணாகரன், பொறியாளர் சத்தியநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் பேசும் போது, உடலும் உள்ளமும் வலிமையாக இருந்தால் தான் விளையாட்டில் சாதிக்க முடியும். கிராமத்தில் தான் உழைப்பும் சக்தியும் இருக்கிறது. சீனா ஜப்பான், மக்கள் தங்கள் உடல் நலன்களை பாதுகாத்து வருகின்றனர். அதனால் தான் அவர்கள் ஆயுள்காலம் அதிகமாக உள்ளது. பெரம்பலூர் எம்.பி. தொகுதியில் உள்ள 100 அரசு பள்ளிகளுக்கு எனது சொந்த செலவில் இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும்.
அரியலூரில் இருந்தது பெரம்பலூர், துறையூர் வழியாக ரயில்சேவை ஏற்படுத்த முயற்சி செய்கிறேன்.
காவிரி, கங்கை, குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து மக்களவையில் வலிறுத்தி உள்ளேன். இது குறித்து பிரதமரிடம் நேரில் வலியுறுத்தி உள்ளேன் என்று தெரிவித்தார்.