Skip to main content

மெரினாவில் கைதான மாணவர்களை விடுதலை செய்ய கோரி புதுக்கோட்டையில் மறியல்

Published on 07/09/2017 | Edited on 07/09/2017
மெரினாவில் கைதான மாணவர்களை விடுதலை செய்ய கோரி புதுக்கோட்டையில் மறியல்



அரியலூர் மாணவி அனிதாவின் மருத்துவர் கனவை சிதைத்த நீட்டை தடை செய்.. மாணவி மரணத்திற்கு தள்ளிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் அதிமுகவினர் அடிக்கடி நீதி கேட்டு மெரினாவில் ஜெ சமாதி முன்பு அமர்வது போல எஸ் எஃப் ஐ மாணவர்களும் ஜெ நினைவிடம் முன்பு நீதி கேட்க வந்ததாக கூறி அமைதியாக அமர அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர் போலீசார்.

இந்த தகவல் வேகமாக பரவ புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே திரண்ட மாணவர் அமைப்பினர் வாலிபர் சங்கம் மற்றும் சிபிஎம் ன் பிரிவுகள் இணைந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மெரினாவில் போராடிய மாணவர்களை விடுதலை செய்.. ஜெ நினைவிடத்தில் நீதி கேட்க சென்ற மாணவர்களை கைது செய்வதா என்று முழக்கமிட்டனர். அங்கு வந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

-இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்