Skip to main content

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது.   மேலும்,  ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.

 

st


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமைத்தீர்ப்பாயம் டிசம்பர் 15ம் தேதி அனுமதி அளித்தது.  தேசிய பசுமைத்தீர்ப்பாய உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில்    தேசிய பசுமைத்தீர்ப்பாய உத்தரவின்படி  தமிழக அரசு அனுமதி அளிக்கக்கோரி ஸ்டெர்லைட் ஆலை வழக்கறிஞர்களின் வாதம் 7ம் தேதியுடன் முடிவடைந்தது.    இதையடுத்து இன்று  உச்சநீதிமன்ற நீதிபதிகள்   ரோகின்டன் பாலி நாரிமன்,  நவீன் சின்கா அமர்வு வழங்கிய தீர்ப்பில்,   ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை அணுகாமல் உச்சநீதிமன்றத்தை அணுகியது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.  மேலும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்க முடியாது என்றும், இது தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலையின் மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும்,  தெரிவித்தனர். 

 

சார்ந்த செய்திகள்