Skip to main content

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து சுத்திகரிக்கப்படும் நீரானது சரியான முறையில்தான் சுத்திகரிக்கப்படுகிறது... -மத்திய அரசு திட்டவட்டம்

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
sterlite


 


தூத்துக்குடி காப்பர் உருக்கு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையால் மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசடையவில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. ஏற்கனவே தனது தரப்பு மனுவை அளித்திருந்த மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது,
 

தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசடைந்ததற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை. அங்கிருக்கும் பல்வேறு ஆலைகளிலிருந்து வரும் கழிவுநீரால்தான் நிலத்தடி நீர் கெடுகிறது. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து சுத்திகரிக்கப்படும் நீரானது சரியான முறையில்தான் சுத்திகரிக்கப்படுகிறது என மத்திய அரசு தனது வாதங்களை முன்வைத்துள்ளது. நவம்பர் 19ம் தேதி பதில் மனுவை அளிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்