Published on 05/07/2021 | Edited on 05/07/2021

தமிழ்நாட்டில் மாநில பசுமைக் குழு அமைக்கப்பட்டு, அதன் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பொது இடங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள மரங்களை அகற்றுவது மற்றும் நடுவது போன்றவற்றை முறைப்படுத்த மாநில பசுமைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசின் முதன்மைச் செயலாளர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவில் டிஜிபி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். உயர் நீதிமன்ற உத்தரவால் மாவட்டந்தோறும் ஆட்சியர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாநில கொள்கை வளர்ச்சிக் குழுவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டு ஆலோசனைகள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.