மக்கள் மீது அக்கறை இருப்பவர்கள் மட்டுமே தமிழகத்தை ஆளமுடியும்: எஸ்.வி. சேகர்
கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் போனாலும், மக்கள் மீது அக்கறை இருப்பவர்கள் மட்டுமே தமிழகத்தை ஆளமுடியும் என்று நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் துவக்க விழா தென் மண்டல இயக்குனர் பிரதீப் கண்டோத் தலைமையில் நடைபெற்றது. இந்த திட்டத்தினை நடிகர் எஸ்வி சேகர் தொடங்கி வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியின் இந்த திட்டம் நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். தூய்மை இந்தியா திட்டம் மக்களுக்கு நலம் காக்கும் திட்டம் என்றும், இதனை எல்லோரும் கடை பிடிக்க வேண்டும் என்று எஸ்வி.சேகர் வேண்டுகோள் விடுத்தார்.